முன்பெல்லாம் கரண்டைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும் இப்போது கரண்ட் பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது- எதிர்கட்சித் தலைவர் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக களமிறங்கும் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவினை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, திமுகவின் 21 மாத ஆட்சிகாலத்தில் எந்தவித நல்ல திட்டங்களையும் அறிமுகம் செய்யவில்லை. மாறாக, மக்களை சுரண்டியும் கொள்ளையடித்தும் ஏமாற்றியும் பிழைப்பை நடத்தி வருகிறார்கள். முன்பெல்லாம் கரண்டைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும் இப்போது கரண்ட் பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்று பேசினார். மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, முதியவர்களுக்கு ஓய்வூதியத் தொகை குறைப்பு போன்றவற்றில் இந்த திமுக அரசு ஈடுபடுகிறது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அதிமுகவிற்கு வாக்களித்து இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

Exit mobile version