எதிர்கட்சித் தலைவரின் சூறாவளி பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக களமிறங்கும் கே.எஸ்.தென்னரசுவினை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பெரியவலசு நால்ரோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு மக்கள் ஆரவரமான வரவேற்பினை அளித்து வருகிறார்கள்.

பிரச்சாரத்தில் எதிர்கட்சித் தலைவர் அவர்கள் பின்வருமாறு பேசியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பெரும்பங்கு வகித்தவர் நமது வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள். மேலும் இன்னும் சில திட்டங்களை கொண்டு வந்தோம் அதனை திமுக அரசு செயல்படுத்தாமல் அதிமுக கொண்டு வந்தது என்பதற்காகவே அவர்கள் நமது எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தமால் உள்ளார்கள். மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். அடுத்த வருடம் 6%, அதற்கடுத்து 12% என மின் கட்டணம் அதிகமாகிவிடும். மேலும் வீட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆட்சி முடியும் தருவாயில் இந்த வரி இன்னும் கூடும். ஸ்டாலின் எதிர் கட்சித் தலைவராக இருக்கும் போது நான் வீட்டிற்கு வீடு 2500 ரூபாய் கொடுக்கும்போது அவர் 5000 ரூபாய் கொடுக்க சொன்னார். இப்போது ஆட்சியில் அவர் உள்ளார். 5000 ரூபாய் அவர் கொடுக்க வேண்டியதுதானே. குடும்பத் தலைவிகளுக்கு மாதமாதம் பணம் தருவதாக சொல்லி தரவில்லை. மேலும் மடிக்கணினி நாங்கள் தந்துகொண்டிருந்தோம். அதனை அவர் நிறுத்திவிட்டார். இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் பேசினார்.

Exit mobile version