ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், கூட்டத்தை முடித்துவிட்டு செல்லுகையில் வில்லரசம்பட்டியில் உள்ள தேநீர் கடை ஒன்றில் மக்களோடு மக்களாக அமர்ந்து தேநீர் அருந்தினார். சில விடியாத கட்சித் தலைவர்கள் போல் இந்த சமூகத்தினர் வீட்டில் உணவருந்தினேன், தேநீர் மண்டினேன் என்று அரசியலாக்காமல் சாதாரண மக்களோடு மக்களாக அமர்ந்து எளிமையாக தேநீர் அருந்தினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள். உடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.வி. இராமலிங்கம், கே.சி.கருப்பண்ணன், காமராஜ், மற்றும் இடைத்தேர்தல் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்களோடு மக்களாக அமர்ந்து தேநீர் அருந்திய எதிர்கட்சித் தலைவர்!
