பிரச்சாரத்தின்போது கழக நிர்வாகி மாரடைப்பில் இறப்பு – எதிர்கட்சித் தலைவர் இரங்கல்!

கடலூர் வடக்கு மாவட்டம், அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. N.T.கந்தன் அவர்கள், ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என்று கழக இடக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இரங்கல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்.டி. கந்தன் அவர்கள். களத்திலே மாரடைப்பில் அவரது உயிர் பிரிந்தது. இத்துயர சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version