பிரச்சாரத்தின் போது குழந்தையைக் கொஞ்சிய எதிர்கட்சித் தலைவர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி அடையச் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தில் பேசி முடித்த பிறகு அழும் குழந்தையை தூக்கி கொஞ்சினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள். குழந்தையைத் தூக்கி கேமிராவிற்கு காட்டினார் எதிர்கட்சித் தலைவர்.

Exit mobile version