நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் துவக்கி வைத்தனர். ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர், மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை முதல்வர், துணை முதல்வர் விநியோகம் செய்தனர். இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை வழங்கப்படும் விருப்ப மனுக்களை, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.