சாலை மார்க்கமாக ஸ்டாலின் எத்தனை இடங்களை ஆய்வு செய்தார்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.

கஜா புயல் சேதங்களை விளக்கிக் கூறி நிவாரணம் வழங்கக்கோரி டெல்லியில் பிரதமர் மோடியை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, உடனடியாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
கஜா புயலுக்கு 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
வர்தா புயல் பாதிப்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சுமார் அரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சாலை மார்க்கமாக ஆய்வு மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எத்தனை இடங்களில் ஆய்வு செய்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்தபின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.

 

Exit mobile version