சேலம் – சென்னை 8 வழிச்சாலையால் சுமார் 70 கிலோ மீட்டர் பயண தூரம் மிச்சமாகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி மேம்பாலம் உட்பட சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். சேலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கோவை, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சென்னைக்கு வர 8 வழிச்சாலையை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். இதனால் 70 கிலோ மீட்டர் பயண தூரம் மிச்சமாகும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.