சங்ககிரி மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம்

சங்ககிரி அருகே உள்ள மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் செல்வ விநாயகர், ஞானதண்டாயுதபாணி, மாரியம்மன் திருக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான மஹா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 

Exit mobile version