கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேட்டுப்பாளையத்தை அடுத்த பில்லூர் வனப்பகுதியானது, மேற்கு தொடர்ச்சி மலையின் ரம்மியம் மிக்க மலைத்தொடர்களை கொண்டது. மேகங்கள் தொட்டுச்செல்லும் வானுயர்ந்த மரங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. பறவைகள், வன விலங்குகள் ,நீரோடைகள் என இயற்கை அன்னையின் மொத்த அரவனைப்பையும் பெற்ற இடமாக இருக்கிறது. இந்த பகுதிக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு வனத்தின் சூழலை அப்படியே அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு அத்திக்கடவு சூழல் சுற்றுலா என்று மலைவாழ் மக்களுடன் இனைந்து தொடங்கப்பட்ட இந்த சுற்றுலா திட்டம் தற்போது மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.