உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. அதற்கான அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
உலகக்கோப்பை என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கும் இதுவரை கோப்பை வெல்லாத இங்கிலாந்து அணியின் மண்ணில் இந்த தொடர் நடைபெற இருப்பதால் அந்த அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. அதற்குமுன் நேற்றைய தினம் அயர்லாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
இதில் அறிமுக வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 25வது ஓவரில் அயர்லாந்து வீரர் பால்பிர்னியை ஸ்டம்பிங் செய்த விதம் தற்போது பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
டென்லி வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்து வைடாக சென்றது. அந்த பந்தை ஸ்வீப் ஷாட்டாக ஆட முயன்ற போது பந்து பேட்டில் படாமல் வைடாக விக்கெட் கீப்பர் பென் போக்ஸிடம் சென்றது.
அம்பயர் வைட் சிக்னல் கொடுக்க பென் போக்ஸோ ஸ்டம்பிங்க்கு அவுட் கேட்டு அப்பீல் செய்தார். எல்லோருக்கும் என்ன நடந்ததென்று புரியவில்லை. மூன்றாவது நடுவர் ரீப்ளே செய்து பார்த்தப்போது பேட்ஸ்மேன் கீரிஸில் இருந்து காலை எடுக்கும் வரை பொறுமை காத்து ஸ்டம்பிங் செய்துள்ளார் பென் போக்ஸ். வேடிக்கை என்னவென்றால் அதற்கு அவுட் வழங்கப்பட்டது தான். இதற்கு ஒருபக்கம் பாராட்டும், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஐபிஎல்லில் டெல்லி அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி டெல்லியின் வீரர்களை கிரீஸில் காலை தூக்கிய துல்லிய தருணத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்தியது ஒருபக்கம் என்றால், இங்கே என்னவென்றால் காலை தூக்கும் வரை பொறுமை காத்து ஸ்டம்பிங் செய்யும் கலை எல்லாம் தோனிக்கு கூட வராது.
பலர் இதை அஸ்வினின் மன்கட் அவுட்டோடு தொடர்புபடுத்தி கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.