ஆஷஸ் தொடரின் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 258 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஸ்டீவ் ஸ்மித் மட்டும் நிதானமாக ஆடி 92 குவித்தார். இதனால், 250 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க ஜேசன் ராய் 2 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறினர். பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 10 களத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்து 96 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 104 ரன்கள் முன்னிலை பெற்றது.

Exit mobile version