ஆஷஸ் தொடரின் இங்கிலாந்து _ஆஸ்திரேலிய 2 வது டெஸ்ட் போட்டி

இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் போட்டியில் சரியாக ஆடாத ராய், இந்த போட்டியிலும் சொதப்பினார்.

இங்கிலாந்து அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே ராயின் விக்கெட்டை இழந்துவிட்டது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ரூட் 14 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டென்லி 30 ரன்களுக்கும், பர்ன்ஸ் 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சின் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 3 வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் மூன்றரை மணிக்கு தொடங்குகிறது.

Exit mobile version