படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று இளைஞர்கள் வேலை தேடி அலையும் சூழலில், சேலம் மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், சுய தொழிலாக பால் பண்ணை நடத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை சேர்ந்தவர் கலையரசன். பொறியியல் பட்டதாரியான இவர், வழக்கம்போல் படித்த படிப்பிற்கு வேலை தேடி, ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில், தாய் தந்தையுடன் விவசாயம் பார்ப்பதற்காக வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர்களது வீட்டில் இருந்த 2 பசு மாடுகளை கலையரசன் முறையாக பராமரித்து வந்ததால், ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில், இதையே தனது தொழிலாக எடுத்துக்கொள்ள விரும்பிய கலையரசன் தற்போது, 10 மாடுகளை கொண்டு பால்பண்ணை நடத்தி வருகிறார். இதில் அவருக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 4,500 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.