திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற சிபிஐ நீதிமன்றம், ப.சிதம்பரத்திற்கு வரும் 27ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரத்தை நாளையும், நாளை மறுநாளும் அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.