விருதாச்சலம் அருகே மூடப்பட்ட சாராய தொழிற்சாலையிலிருந்து எரிசாராயம் கடத்தல்!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே, மூடப்பட்ட சாராய தொழிற்சாலையிலிருந்து எரிசாராயம் கடத்தப்பட்ட நிலையில், சார் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். கானாதுகண்டான் கிராமத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சாராய தொழிற்சாலையிலிருந்து மர்ம நபர்கள் சிலர் எரிசாராயத்தை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சார் ஆட்சியர் பிரவீன் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர், ராட்சத கொள்கலனில் 40 ஆயிரம் லிட்டர் சாராயம் இருப்பதை கண்டறிந்தார். தொழிற்சாலையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சிலர், சாராயத்தை கடத்தி வெளியில் விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர் பிரவீன் குமார், தொழிற்சாலையில் உள்ள சாராயத்தை அழிப்பது குறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொழிற்சாலையில் இருந்து கடத்தப்பட்ட சாராயத்தை அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்தார்.

Exit mobile version