கும்பமேளாவின் போது எளிதாக பயணிக்க நீர்வழி போக்குவரத்தை ஊக்குவிக்க அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவின் போது பக்தர்கள் எளிதாக பயணிக்கும் வகையில் நீர்வழி போக்குவரத்தை ஊக்குவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் கும்பமேளா நடைபெற உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே சமயத்தில் பிரயாக்ராஜ் நகரில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குயிலா காட், பழைய நைனி பாலம், சரஸ்வதி காட் மற்றும் சுஜவான் காட் பகுதிகளில் புதிதாக படகு குழாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் பக்தர்கள் படகுகளை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் புனித தலங்களுக்கு விரைவாக செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version