ஸ்டாலின் பிரசாரக் கூட்டத்தில் காலியாக கிடந்த இருக்கைகள்

கரூர் திருமாநிலையூரில் நடைபெற்ற திமுக கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது பொதுமக்கள் கலைந்து சென்றதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகின

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திருமாநிலையூரில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மெதுவாக கலையத் தொடங்கினர். ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தாங்கள் வெயிலில் படும் அவஸ்தை எப்படித் தெரியும் என்று புலம்பியவாறே பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஸ்டாலின் பேசும் போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன.

Exit mobile version