பணி நியமன ஆணை மற்றும் புதிய கட்டங்களை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

வனத்துறை காவலர்கள் மற்றும் தமிழ்நாடு வாணிபக் கழக இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

மேலும், தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்காக புதிய கட்டங்களை, முதலமைச்சர் காணொலியில் திறந்து வைத்தார்.

மொத்தம் 36 கோடியே 12 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டங்களை முதலமைச்சர், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அரியலூரில் மூன்று தளங்களுடன், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகக் கட்டடம், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகக் கட்டடங்கள், சேலம் மாவட்டம் சூரமங்கலம், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை , விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் கட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றம் திருச்சியில் தீயணைப்புத் துறையினருக்காக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது, அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

564 பேர் வனக் காவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 7 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அப்போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். வனக் காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் 66 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் தமிழகத்தின் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் 9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சைனிக் இளநிலை மாவணவர்கள் விடுதியை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். அதுபோல், 86 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பள்ளிக் கட்டடங்கள், 3 ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவன கட்டடங்கள் மற்றும் ஒரு ஆசிரியர் இல்ல கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 43 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் காலியாக இருந்த 491 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.   தமிழ்நாடு வாணிப கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பானையாளர்களை வைத்து கடந்தாண்டு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 491 பேர் இளநிலை உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக, 7 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version