வரும் சட்டமன்றத் தேர்தலில் தொழில்நுட்ப பிரசாரமே எதிரொலிக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, அதிமுகவை நோக்கி வரும் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியாக ஏற்படுத்தி தரப்படும் எனக் கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.