டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஒழுங்காக செயல்படாத பணியாளர்கள் பணி நீக்கம்

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஒழுங்காக செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, டெங்கு கொசுக்களை ஒழிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சரிவர வேலை செய்யாத தற்காலிக பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டு, மாற்று ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version