மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையை சேர்ந்த நபர் ஒருவர் மினியேச்சர் வாக்குப்பதிவு இயந்திர சிற்பங்களை உருவாக்கி உள்ளது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்திலும் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குகளை மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையை சேர்ந்த மினியேச்சர் சிற்பக் கலைஞரான ராஜா, தங்கம் மற்றும் வெள்ளியை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கியுள்ளார்.
மக்கள் தங்களது பொன்னான வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்துள்ளதாக கூறுகிறார் ராஜா.