இலங்கையில் 4 மாதங்களுக்கு பிறகு அவசர நிலை விலக்கம்

இலங்கை தொடர்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அங்கு அமல்படுத்தப்பட்ட அவசரநிலை 4 மாதங்களுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 259 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. வட மாகாணங்களில் ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டன. சிலாபம், குளியாபிட்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் வன்முறை காரணமாக அசாதாரண நிலை ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த 4 மாதங்களுக்குப் பிறகு அவசரநிலை விலக்கிக் கொள்ளப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Exit mobile version