ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் 104 – தமிழ்நாடு அரசு

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கொரோனா சிகிச்சை அளிக்கும் இடங்களில், மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க, தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று, ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை சென்றடைய, தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க, 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்ட்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version