அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதியைப் பெற, அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளாக மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக பலர் குடியேறுகின்றனர். இதைத்தடுக்கும் வகையில் பிரமாண்ட சுவர் எழுப்ப 5.7 பில்லியன் டாலர் ஒதுக்கும்படி, அந்நாட்டின் அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு அமெரிக்காவில் இருக்கும் எதிர்க்கட்சிகளான ஜனநாயக கட்சி, நாடாளுமன்றத்தில் செலவின மசோதாவை தாக்கல் செய்யவிடாமல் தடுத்தது. இதன் காரணமாக பல்வேறு அரசுத்துறைகளும் சரிவர இயங்க முடியாமல் பணிகள் பாதியில் நின்றன. இருப்பினும் அதை சமாதானப்படுத்திய அரசு, வெள்ளை மாளிகையில் திடீர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதி மசோதாவில் கையெழுத்திட உள்ளதாகவும், இதற்காக அவசர நிலையை பிரகடனப்படுத்துவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இம்முடிவிற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.