இந்து, இஸ்லாமிய அமைப்புகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, இந்து, இஸ்லாமிய தலைவர்களுடன், மத்திய அரசு நேற்று அவரச ஆலோசனை நடத்தியது.

இந்திய வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வந்த அயோத்தி பிரச்சினைக்கு, உச்சநீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு முற்றுப்புள்ளி வைத்தது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்புக்களுக்கே சொந்தம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

இதைத் தொர்ந்து, நாட்டில் அமைதியை பராமரிப்பது தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்து, இஸ்லாமிய தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில், டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக, இந்து, இஸ்லாமிய தலைவர்கள் உறுதி அளித்தனர். கூட்டத்திற்கு பிறகு கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version