மேயரை தேர்வு செய்யும் அவசர சட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயரை தேர்வு செய்யும் அவசர சட்டம், நடைமுறைக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட சட்டம் தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Exit mobile version