தூதரக அதிகாரிகள் மூலம் சீனாவிலுள்ள இந்திய மாணவர்கள் கண்காணிப்பு

சீனாவில் உள்ள இந்திய மாணவர்கள் தொடர்ந்து தூதரக அதிகாரிகளின் தொடர்பில் இருப்பதாக மத்திய வெளியுறுவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வுகான் மாகாணத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். 638 இந்தியர்கள் உட்பட மாலத்தீவை சேர்ந்த  7 பேரையும் விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதில் 10 இந்திய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயசங்கர் கூறினார். இந்நிலையில் 80 இந்திய மாணவர்கள் சீனாவிலேயே இருக்க விருப்பம் தெரிவித்தாக கூறிய அமைச்சர், தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய மாணவர்கள் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். இதுவரை, சீனா உட்பட வெளிநாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 539 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வெளியுறவு அமைச்சகம் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version