எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் உடல்நலக்குறைவால் 99வது வயதில் காலமானார்.

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் உடல்நலக்குறைவால் 99வது வயதில் காலமானார். அவரது வாழ்க்கை வரலாறு கூறும் சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்…

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவரும் எடின்பர்க் கோமகனுமான பிரின்ஸ் ஃபிலிப் கடந்த 1921 ஆம் ஆண்டு ஜுன் 10 ஆம் தேதி கிரிஸ் நாட்டில் பிறந்தார். கிரீஸ், டென்மார்க் நாடுகளின் இளவரசராக இருந்த ஆண்ட்ரூவின் ஒரே மகனான ஃபிலிப், கிரீஸ் தீவுகளில் ஒன்றான மான்ரிபோஸில் ((mon repos)) பிறந்தார். டார்ட் மவுண்டில் உள்ள கல்லூரியில் ஃபிலிப் படித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த பிரிட்டன் அரசரின் மகள் எலிசபெத்துடன் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே உறவினரான எலிசபெத், இளவரசர் ஃபிலிப்பை காதலிக்க தொடங்கினார். இதையடுத்து, பிரிட்டன் அரசர் ஆறாம் ஜார்ஜிடம் ஃபிலிப் பெண் கேட்டார். இதற்கு பிரிட்டன் அரசரும் சம்மதம் தெரிவித்ததால் கிரிஸ், டென்மார்க் அரசப் பட்டங்களை துறந்த ஃபிலிப், கடந்த 1947 ஆம் ஆண்டு எலிசபெத்தை கரம் பிடித்தார். திருமணத்திற்கு முன்பு பிரிட்டன் அரசரனின் விருப்பத்திற்கு இணங்க எடின்பர்க் கோமகனாக முடிசூட்டி கொண்டார்.

பிரிட்டன் மக்களின் பெரும் அன்புக்கு பாத்திரமான ஃபிலிப் – எலிசபெத் தம்பதிக்கு சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட் ஆகிய மகன்களும், ஹேன் என்ற மகளும் உள்ளனர். ஃபிலிப் தம்பதிக்கு 8 பேரக்குழந்தைகளும், 10 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இருதய கோளாறு காரணமாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகிய ஃபிலிப், வின்ஸ்டர் கேஸ்டலில் உள்ள அரசு மாளிகையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28 நாட்களாக இருதய தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் ஃபிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version