கோவை அருகே, பதினொன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்காவிற்கு நண்பர்களுடன் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவியை, மணிகண்டன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சென்ற மாணவியை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததோடு , அதனை நண்பரை கொண்டு வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்ததாக ராகுல், பிரகாஷ் , கார்த்திகேயன் மற்றும் நாராயணமூர்த்தி ஆகிய நான்கு பேரை, ஆர்.எஸ் புரம் மகளிர் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் ஒரு இளைஞரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.