தேக்கம்பட்டி பவானி ஆற்று படுக்கையில் நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாம் இன்றுடன் முடிவடைகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தபட்டு வருகிறது.
கோவில்களில் மக்கள் வெள்ளத்தின் நடுவே திருப்பணிகளை மட்டும் ஆண்டு தோறும் மேற்கொள்ளும் யானைகளுக்கு அவற்றின் மன அழுத்தத்தையும் சோர்வை போக்கி யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இந்த யானை முகாம் துவங்கபட்டது.
மூன்றாண்டுகளாக முதுமலை தெப்பகாட்டில் நடத்தபட்ட இந்த யானைகள் நலவாழ்வு முகாம் பின்னர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டிக்கு மாற்றபட்டு தொடர்ந்து நடத்தபட்டு வருகிறது.12 வது ஆண்டாக தொடர்ந்து இந்தாண்டும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வந்தது, இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றன.
மதுரை,திருச்சி,ராமேஸ்வரம்,காஞ்சிபுரம்,கோவை உள்ளிட்ட தமிழகத்தில் பழமையான கோவில்களில் இருந்து அனைத்து யானைகளும் இம்முகாமில் கலந்துகொண்டன, இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது வனவிலங்குளுக்கு மிக உகந்த மேற்குதொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாகவும் மூன்று பக்கங்களும் மலைகளாலும் சூழ்ந்து பவானி ஆற்றங்கை ஓரத்தில் இயற்கையான சூழலில் நடத்தப்பட்டது.
இயற்கையான சூழலில் 48 நாட்கள் திட்டமிட்டு நடத்தபட்டு வந்த யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளை பராமரிக்க 1.40 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கியது.முகாமில் யானைகளுக்கு பசுஞ்தீவனங்கள் சோளதட்டு, கூந்தபனை,தெண்ணை மட்டை ,மசால் புல் உள்ளிட்ட பசுந்தீவனங்களும், கொள்ளு,பாசிபயிறு,பேரிட்சை,அரிசி சாதம் போன்ற ஊட்டசத்து உணவு வகைகளும் அளிக்கப்பட்டன . மேலும் யானைகளின் உடல் எடைக்கு ஏற்ப உணவு பங்கீடுகள் மூலம் சமச்சீர் உணவுகள் அளிக்கப்படுவதுடன் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி யானைகளுக்கு உடல் எடையை குறைக்க காலை மாலை என இரு வேலைகளிலும் நடைபயிற்சியும் அளிக்கபட்டு யானைகளின் ஆரோக்கியம் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யபட்டிருந்தது.
யானைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கும் சிறு சிறு காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவக்குழு முகாமில் அமைக்கபட்ட ஒரு தலைமை மருத்துவர் தலைமையில் ஏழு பேர் கொண்ட மருத்துவக்குழு 24 மணிநேரமும் யானைகளை கண்கானித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யபட்டன.
பொதுவாக யானைகள் வன உயிரினம் என்பதால் அவைகளுக்கான தண்ணீர் தேவை என்பது மிக அதிகம் அதுவும் இயற்கையின் கொடையாக உள்ள வனங்களில் இருந்து ஓடும் ஆற்று தண்ணீரில் குளித்து மகிழ்வது என்பது யானைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் குறிபிட்ட மாவட்டங்களில் மட்டுமே ஆறுகள் உள்ளன எனவே ஆறுகள் இல்லாத மாவட்டங்களிலும் கடல் சார்ந்த மாவட்டங்களில் பராமரிக்கப்படும் கோவில்யானைகளுக்கு இந்த வசதிகள் இல்லாததால் அந்த யானைகளுக்கு போர் தண்ணீர் மட்டுமே கிடைப்பதால் இம்முகாமில் அனைத்து யானைகளும் பவானி ஆற்று நீரில் குளித்து மகிழ சவர் பாத் ஏற்பாடு செய்யபட்டது, இதில் ஆற்று நீரினை கண்ட பல்வேறு கோவில் யானைகளும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றன, பாகன்களே அழைத்தாலும் கூட எழுந்து வர அடம் பிடிக்கும் இந்த யானைகள் சவரில் படுத்து உற்சாகம் குளித்து வருகிறது .
மேலும் இந்த முகாமினை பார்வையாளர்களையும் அனுமதிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கபட்டு யானைகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் யானைகளை காண சிறப்பு ஏற்பாடுகளும் செய்யபட்டிருந்ததால் யானைகள் முகாமே சுற்றுலாத்தளமாக மாறியது , தங்களது குறும்புகளால் ரஷ்யா கலைஞர்கள் வரை தம்பக்கம் ஈர்த்த தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாம் இன்று நிறைவுற்று தம் சொந்த கோவில்களுக்கு திரும்ப செல்ல வேண்டியது கட்டாயம் என்பதால் பிரியா விடைக்கு தயாராகி வருகிறது முகாம் யானைகள் . கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்றோடு ஒன்று பிரியாமல் சேர்ந்தே இருந்த யானைகள் பிரிவதை எண்ணி மிகுந்த சோகத்தில் உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கிய யானைகள் முகாம் இன்று முடிவுறுகிறது. இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் யானைகள் சம்பந்தபட்ட கோவில்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. மேலும் இப்பணிகளை சம்பந்தபட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கோண்டு வருகின்றனர்.