குடியாத்தம் அருகே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதால் விவாசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கதிர்குளம் கிராமத்தில், விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி மற்றும் மா, வாழைத் தோட்டங்களையும் நாசம் செய்தன. இதனையடுத்து கிராம மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர், யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து வனப்பகுதியிலிருந்து வரும் யானைகள் கூட்டம், விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.