கோவையில் தனது குட்டிற்காக சோர்வுற்ற நிலையிலும் பெண் யானை ஒன்று உலா வரும் காட்சிகள் காண்போரை நெகிழ வைத்துள்ளது.
கோவை மாங்கரையில் கடந்த வியாழன்கிழமை நோய் வாய்ப்பட்ட பெண் யானை ஒன்று சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்தநிலையில், அந்த யானையுடன் இருந்த குட்டி யானை வனத்துறையினரால் வனத்திற்குள் விரட்டப்பட்டது. இருபது வயது மதிக்கத்தக்க இறந்த பெண் காட்டு யானையின் பிரேத பரிசோதனையில் வயிற்று புண் மற்றும் குடல் புழு காரணமாக யானை இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண் யானை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உணவின்றி சோர்வுற்ற நிலையிலும் குட்டியின் உணவு தேடலுக்காக அவ்வப்போது உலா வந்துள்ளது. கண்களில் கண்ணீர் வடிய சோற்வுற்ற நிலையில் தனது குட்டிக்காக அந்த பெண் யானை அலைந்த காட்சிகள் காண்போரை உருக வைத்துள்ளது.