கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் – அமைச்சர்கள் தொடங்கிவைத்தார்

கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாமை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி மற்றும் முதுமலை அருகே உள்ள தெப்பகாட்டில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம்.

அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் தொடங்கியது. இன்று முதல் 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புத்துணர்வு முகாம்களுக்கு வந்த கோயில் யானைகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. முகாமினை பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து பார்த்து செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version