கேரள மாநிலம் திருச்சூரில் யானைகளுக்கு உணவளிக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவிலில், ஆடி மாதம் ‘யானையூட்டு’ எனப்படும் யானைகளுக்கு உணவளிக்கும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. கோவில் தெற்கு கோபுர வாசலில் 56 யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர், 10 வகையான பழங்களுடன், 500 கிலோ புழுங்கல் அரிசியில், மூலிகைகள் கலந்த உணவு யானைகளுக்கு வழங்கப்பட்டன. யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கேரள மக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.