தேன்கனிக்கோட்டை அருகே, யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், அய்யூர் பகுதியில் இருவரை காட்டுயானை தாக்கியதில், அப்பையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகராஜ் என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.