மின்சாரம் திருடி நிகழ்ச்சி நடத்திய திமுகவினர்

திமுக நடத்திய நிகழ்ச்சி ஒன்றிற்காக, மின்சார பெட்டியிலிருந்து, திமுகவினர் முறைகேடாக மின்சாரம் திருடியது அம்பலமாகியுள்ளது.

சென்னை திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் எழும்பூர் தெற்கு பகுதியில், அனிதா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து, பேச்சாளர் சாலமன் பாப்பையா, நடிகர் சத்யராஜ், அரக்கோணம் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்காக, பள்ளி வளாகத்தின் அருகே இருந்த மின் பெட்டியில் இருந்து, திமுகவினர் மின்சாரத்தை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தினர். மேலும், இந்த நிகழ்ச்சியால் வெகு நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. காலம் காலமாக திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தியே நிகழ்ச்சிகளை நடத்திவரும் திமுகவினர், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பின்னரும், திருந்தாமல் உள்ளது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version