மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ சேவை: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

‘மாசில்லா தமிழகம்’ திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, மின்சாரத்தில் இயங்கும் கார், பேருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில், பெட்ரோல் ஆட்டோக்களை மின்சார ஆட்டோக்களாக மாற்றி, 100 மின்சார ஆட்டோக்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பதன் அடையாளமாக 4 மின்சார ஆட்டோக்களின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ சேவையை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Exit mobile version