எந்தவொரு சூழலிலும் மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளதாகவும், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுக்குப்பின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சில தொழிற்சங்கங்கள் தவறான வழிகாட்டுதலின் படி நீதிமன்றத்திற்கு சென்று வழக்குகள் தொடுத்துள்ளதாகவும், அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மின்வாரியம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.