தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக எம்.எல்.ஏ பிரசாரம்

திருச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு பிரசாரத்தில் ஈடுபட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை மற்றும் 30-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி வாக்குப்பதிவு நடைபெறும் ஒரு நாளுக்கு முன்னரே பிரசாரத்தில் ஈடுபடும் வேலைகளை கட்சிகள் கைவிட வேண்டும். அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டம் அந்தநல்லூரில், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனை கண்டித்து பொதுமக்கள் உட்பட மாற்றுக்கட்சியினர் கே.என்.நேருவின் வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால், திமுகவினர் பொதுமக்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு மற்றும் திமுக வேட்பாளர்கள் உட்பட பலர் மீது சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version