மத்தியப்பிரதேசம், மிசோரம் தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு

மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயகக் கடமை ஆற்றுகின்றனர்.

மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் ஒரேகட்டமாக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் இரண்டு மாநிலங்களிலும் மக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத், அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

 

Exit mobile version