நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி, 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மவட்டத்தில் சமூகநலத்துறை சார்பாக திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு, ஆயிரத்து 333 பயனாளிகளுக்கு, 10 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, 2021ம் ஆண்டில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்ந்து பதவியேற்பார் என்று உறுதிபடக் கூறினார்