நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. தேர்தல் முதன்மை அலுவலர் மான சவுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தேர்தல் பணியாளர்கள், ஆசிரியர்கள் என ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டனர். தேர்தலின்போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது, வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது போன்றவை காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.