தேர்தல் முன் விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் மீது தாக்குதல்

மதுரையில் பா.ஜ.க. பிரமுகர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பழங்காநத்தத்தை சேர்ந்த பாபநாசம் என்பவர் பா.ஜ.கவின் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் டீக்கடையில் பேசிக் கொண்டிருந்த அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.கவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version