இடைத்தேர்தல், வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடத் தடை

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அக்டோபர் 21ஆம் தேதி மாலை ஆறரை மணி வரை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு நாளில் காலை 7 மணியில் இருந்து மாலை ஆறரை மணி வரை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடவும் பரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு முடிவடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்துடன் முடிகிற 48 மணி நேரக் கால அளவில் கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும் மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Exit mobile version