வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில், திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த போட்டியிட்டார். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுகட்டாக, கதிர்ஆனந்த் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 18ந் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19 ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும், 22ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி எனவும் தெரிவித்துள்ளது.

5ந் தேதி தேர்தல் நடக்கும் எனவும், 9 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. உடனடியாக அத்தொகுதியில், தேர்தல் நடைத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version