நாளை வாக்குப்பதிவு: சினிமா காட்சிகளை ரத்து செய்து உத்தரவு

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்துள்ள நிலையில் அனைத்து வாக்குசாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 17-ம் (இன்று) தேதி இரவுக் காட்சிகளும், தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version