திருவள்ளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1381 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 2 மினி லாரிகளை சோதனையிட்ட போது, அவற்றில் 55 பெட்டிகளில், தலா 25 கிலோ எடையளவு உள்ள 1381 கிலோ தங்கம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒட்டுனர் உட்பட லாரியில் இருந்த 4 பேரை பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட இருந்த தங்கம் என தெரியவந்துள்ளது.