மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

மாநிலங்களவையில் 55 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதற்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீது பரிசீலனை வரும் 16 ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களை திரும்பபெற கடைசி நாளாக மார்ச் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version