நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, 27 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில், முக்கிய அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி வழங்கினார். ஆலோசனையில், வாக்குச்சாவடிகளை கண்டறிதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும்,
வரும் 14ம் தேதி வெளியிடப்படவுள்ள ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை, தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்தல் மற்றும் வெளியிடுதலை உரிய காலத்திற்குள் மேற்கொள்ளுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவின கணக்குகளை பெற்று, சரிபார்க்கவும், ஆலோசனையில் உத்தரவிடப்பட்டது. தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்களை, மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், தேர்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மனுத் தாக்கல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.